செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அஜித்துடன் மோதும் ஏ.ஆர். முருகதாஸ்.. ஒருவேளை அந்த பழைய பகையா?

அஜித்துக்கு தீனா என்ற திருப்புமுனை படத்தை கொடுத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். அஜித்துக்கு மட்டும் அல்ல, விஜய்-க்கும் கத்தி போன்ற ஒரு நல்ல கன்டென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். இவர் பார்வை பட்ட நடிகர்கள் பல மடங்கு உயரத்துக்கே சென்றுள்ளனர். அந்த வகையில், தற்போது இவர் பார்வை சிவகார்த்திகேயன் மீது விழுந்துள்ளது. இவர்கள் காம்போவில் வேகமாக ஒரு படம் தயாராகி வருகிறது.

அமரன் படத்தில் அசால்ட்டாக சிவகார்த்திகேயன் 100 கோடி சாதனை செய்திருந்தாலும். அது ஒரு தரமான பையோபிக் படம். சிவகார்த்திகேயன் என்று இல்லாமல், அதில் யார் நடித்திருந்தாலும், இந்த வசூலை ஈட்டிருக்கும். அதே போல ஏ.ஆர் முருகதாஸ் படமும் கண்டிப்பாக ஒரு கன்டென்ட் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த படத்தில் மினிமம் 200 கோடி வசூலாவது சிவகார்த்திகேயன் கொடுக்க வேண்டும்.

இந்த நிலையில், அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் காம்போவில் உருவான படம் மே மாதம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது. இதை போட்டி என்று சொல்வதா அல்லது படத்தின் வசூலுக்கு வந்த சிக்கல் என்று சொல்வதான்னு தெரியவில்லை.

தல கூடவே போட்டியா.?

மே 1, அஜித் பிறந்தநாள் அன்று, அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லீ படம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அதே நாளில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான புதிய படம் வெளியாகுமாம். இது யாருடைய முடிவு என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது.

குட்டி தளபதி என்ற பட்டம் வந்ததிலிருந்தே சிவகார்த்திகேயனை கையில் பிடிக்க முடியவில்லை என்று ஏற்கனவே ஒரு சில தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். மறுபக்கம் ஏ.ஆர். முருகதாஸுக்கு நடிகர் அஜித்துக்கும் எதோ சண்டை என்ற பேச்சும் உள்ளது.

இப்படி இருக்க, தல பற்றி பெருமிதத்துடன் பேசி வரும் சிவகார்த்திகேயன் இதை சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேலை அப்படி வெளியாகி, படம் ஹிட் மட்டும் ஆகிவிட்டால், டயர் 2 நடிகரிள், இருந்து டயர் 1 நடிகராக மாறிவிடுவார். மேலும் இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து.. இது கண்டிப்பாக துப்பாக்கி 2 படம் தான்.. ஒருவேளை இருக்குமோ.. என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News