லிவிங் லெஜெண்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழாவுக்கு யங் லெஜெண்ட் விருதை வாங்கினார் சிவகார்த்திகேயன்.

அப்போது பேசும்போது, ‘என்னை மக்கள் தங்கள் பக்கத்து வீட்டு பையன் போல இருப்பதால், ஏற்றுக்கொண்டார்கள். அவ்வளவு ஸ்டைலிஷ் எல்லாம் நான் கிடையாது. நம்மளை மாதிரி ஒரு பையன் சினிமாவில் எதோ ட்ரை பண்றான்னு ஒரு கனெக்ஷன் இருந்தது.

அவுங்களோட அன்பு கொடுக்க,கொடுக்க நிறைய மோட்டிவேஷன் வந்தது.இன்னும் கடினமா உழைக்கணும்ணு ஆசை தான்.அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை. நான் கொடுக்கிற ஹார்ட் வொர்க் மக்களுக்கு பிடிக்கணும்.

31 வயசாயிடுச்சேன்னு பீல் பண்ணும்போது, எனக்கு யங்ன்னு அவார்ட் கொடுத்ததும் நன்றி.விருது வழங்கும் விழாக்களுக்கு வரும்போது தான் சூட் போட்டுட்டு வருவேன். இப்படி சூட்டெல்லாம் போட்டுட்டு வருவது ரொம்ப நல்லா இருக்கு.

தமிழ் மக்கள் இளகிய மனசு உள்ளவங்க.ரொம்ப ஆராயமாட்டாங்க. குட்டி காமெடி சொன்னா கூட நல்லா சிரிப்பாங்க.சிரிக்கவைக்கறதை நான் வேலையா பார்க்கறது இல்லை.” என்று பேசினார்.

அவர் பேசி முடித்தவுடன் பக்கத்தில் இருந்த ஒரு பிரபலம், மொக்கை காமெடிக்கே சிரிப்போம்ணு சொல்லுறாரு. அத்தோட, நம்ம மக்கள்ன்னு அவரால சொல்ல முடியலை பாருங்க, மனவாடு மனவாடு தான்”ன்னு ஒரே சிரிப்பு.

முடியலடா சாமி…