72 வயது நடிகரை பவுன்சர்சை வைத்து துரத்திய சிவகார்த்திகேயன்.. என்ன சார் இதெல்லாம்!

முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு சிவகார்த்திகேயனின் சில நடவடிக்கைகள் மூத்த நடிகர்கள் சிலபேருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு மூத்த நடிகர் பேட்டி கொடுத்ததன் மூலம் தெரியவருகிறது.

ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்கும் அதே நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த பிறகு தன்னை சந்திக்க வரும் பிரபலங்களிடம் பந்தா காட்டுவது, தன்னுடைய அடியாட்களை வைத்து விரட்டியடிப்பது என பல வேலைகளை செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு விஷயத்தை சிவகார்த்திகேயன் செய்துள்ளார் என கூறியது தான் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டை பொறுத்தவரை நம்ம வீட்டு பையன் போல் எல்லோரிடமும் சகஜமாக பழகுகிறார் என்ற பிம்பமே சிவகார்த்திகேயன் மீதுள்ளது.

விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்படும் போதும் இதை முன்வைத்து கூறுகின்றனர். ஆனால் சமீபத்தில் நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் என்பவரை சிவகார்த்திகேயன் பவுன்சர்சை வைத்து விரட்டிய சம்பவத்தை ஒரு பேட்டியில் கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சிவசங்கர்.

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் நடன கலைஞராக நடித்தவர் சிவசங்கர். 72 வயதான இவர் தன்னுடைய இளம் வயதிலிருந்தே சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் இவர் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

அப்படி இருந்தவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். இதனால் ஏதாவது ஒரு முன்னணி நடிகர் ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட தன்னுடைய மார்க்கெட் பிக்கப் ஆகி மீண்டும் தனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்து விடும் என்ற ஆசையில் அவர்களது நட்பைப் பயன்படுத்தி வாய்ப்பு கேட்க பலமுறை அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

முதல் முறை சிவகார்த்திகேயனை சந்திக்கச் சென்றபோது கண்டிப்பாக சொல்கிறேன் என கூறி அனுப்பிவிட்டாராம். சொல்லி நீண்ட நாட்களாகியும் வாய்ப்பு தராததால் மீண்டும் அவரை பார்க்க சென்றுள்ளார் சிவசங்கர். ஆனால் சிவசங்கரிடம் சிவகார்த்திகேயனின் பவுன்சர்கள் உங்களை உள்ளே அனுமதித்தால் எங்களுடைய வேலை போய்விடும் என கையெடுத்துக் கும்பிட்டு விட்டார்களாம். இதனால் தன்னால் அவர்கள் வேலை கெட வேண்டாம் என சென்று விட்டதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சிவசங்கர்.

sivasankar-cinemapettai
sivasankar-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்