fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு புது சிக்கல்.. தலையில் துண்டைப் போட்ட படக்குழு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு புது சிக்கல்.. தலையில் துண்டைப் போட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக அயலான் படத்தில் நடிக்க உள்ளாராம்.

வெறும் இரண்டு வாரம் மட்டுமே அயலான் படிப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம்.

சிவகார்த்திகேயன் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

மேலும் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பாளரான RD ராஜா தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங் முதல் முறையாக ஜோடி போட்டுள்ளார். குறைந்த நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ள நிலையில் ரகுல் பிரீத் சிங் தற்போது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் பிரீத் சிங் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியாவுடன் நட்பில் இருந்ததாகவும், அவருடன் அடிக்கடி போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான் படம் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது உருவாகயிருந்த நிலையில் அந்த படத்திற்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது படக் குழுவினருக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளதாம்.

Continue Reading
To Top