சினிமாவில் 15 வருடங்களாக தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சுப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் சிம்ரன், திருமணத்திற்கு பிறகு, நடிப்பதை நிறுத்திவிட்டார் ஆனால் சில படத்தில் மட்டும் தலைகாட்டி வந்தார் இப்பொழுது நடிகர் அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி என்ற படத்தில் போலிஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.

seema raja

அதுமட்டும் இல்லாமல் போன்றாம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமாராஜா படத்தில் கிராமத்து வில்லியாக மிரட்ட போகிறார் , படத்தில் ஹீரோவான சிவகர்த்திகேயனுக்கு பிரதான வில்லியாக படம் முழுவதும் வரவுள்ளார் சிவகர்த்திகேயனை மிரட்டும் கட்சிகளில் மிரட்டி வருகிறாராம் நடிகை சிம்ரன்.

இவர் திருமணத்திற்கு பிறகு  சில படத்தில் நடித்து வந்தாலும் எந்த படமும் சரியான கம்பேக் படமாக சிம்ரனுக்கு அமையவில்லை. ஆனால், சீமராஜா திரைப்படம் சிம்ரனுக்கு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என அனைவரும் கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.