Amaran-Sai Pallavi: கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அமரன் உருவாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை பிரதிபலித்துள்ள இப்படம் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அமரன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்நாள் அடையாளத்தை கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இதில் சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சாய்பல்லவியின் கதாபாத்திரம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்துவாக வாழ்ந்திருக்கும் சாய் பல்லவி
மேஜர் முகுந்த் வரதராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தன் கணவரின் வீர மரணத்தை பெருமையோடு ஏற்றுக்கொண்ட சிங்கப்பெண் தான் இவர்.
அதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் மீது இருக்கும் காதலை அவர் வெளிப்படுத்தும் விதமும் இறுதியில் கணவரை இழந்த பிறகு அசோகச் சக்ரா விருதை வாங்கும் போது இருந்த நிமிர்வு என ஒரிஜினல் இந்துவின் கதாபாத்திரத்திற்கு இவர் உயிர் கொடுத்துள்ளார்.
அதிலும் வீடியோவின் இறுதியில் கடலுக்கும் ஆகாயத்திற்கும் இடையில் உள்ள தூரம் தான் எனக்கும் அவனுக்கும் என வரும் வசனம் அவருடைய காதலை அப்படியே காட்டி இருக்கிறது. இப்படியாக அமரனின் இதயத்துடிப்பான இந்துவாக வாழ்ந்துள்ள சாய் பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சாய் பல்லவியை பெருமைப்படுத்திய அமரன்
- அமரன் பட்ஜெட்டால் கமலுக்கு ஏற்பட்ட தலைவலி
- ஹைப்பை ஏற்றும் அமரன்
- சென்னையில் டூயட் ஆட தயாராகிய சிவகார்த்திகேயன்