சூர்யா பட வாய்ப்பை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகை.. ஒரே படத்தால் கொட்டும் வாய்ப்புகள்!

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சூர்யா சுறுசுறுப்பாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்னதாக ஒரு இளம் இயக்குனர் படமொன்றில் முதலில் நட்புக்காக நடிக்க ஆரம்பித்து பின்னர் கதை நன்றாக இருந்ததால் தன்னுடைய கதாபாத்திரத்தை கொஞ்சம் அதிகரிக்கச் சொல்லி நடித்து வருகிறாராம் சூர்யா.

மேலும் சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் சூர்யா 40 படத்தில் முதலில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லையாம்.

தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியா அருள்மோகன் என்ற இளம் நடிகை சூர்யா 40 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

முன்னதாக தெலுங்கில் நானி உடன் கேங் லீடர் படத்தில் நடித்ததன் மூலம் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வாய்ப்பை பெற்றார் பிரியா. தற்போது டாக்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இளம் ரசிகர்களுக்கிடையே பிரியாவுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து தற்போது சூர்யா படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம்.

priyanka-arul-mohan
priyanka-arul-mohan

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பிரியா அருள்மோகன்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்