சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்து ஆடும் பிரின்ஸ் பட நடிகை.. பிம்பிளிக்கி பிளாப்பி லிரிகல் விடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் வெளிநாட்டு மாடல் அழகியான மரியா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரின்ஸ் படத்தின் இயக்குனர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் என்பதால் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரின்ஸ் படத்தை எடுத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண் விஸ்வா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரின்ஸ் படம் வெளிநாட்டிலிருந்து வரும் பெண் இந்தியாவை சுற்றி பார்க்க விரும்புகிறார் அவருக்கு இடங்களை சுற்றிக் காட்டும் நபராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

Also read: வாரிசு நடிகை என்பதால் வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்.. அதிதி சங்கரை தாக்கிய நடிகை

இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவில் சுற்றி பார்க்கும் போது ஏற்படும் காதலும் அதன் பிறகு இவர்கள் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்துதான் பிரின்ஸ் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. ஆனால் பிரின்ஸ் படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களுக்கு திருப்தி படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது பிரண்ட்ஸ் படத்திலிருந்து பிம்பிளிக்கி பிளாப்பி என்ற பாடலை தமன் இசையமைத்துள்ளார். ஆனால் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களுக்கு பாடல் பிடிக்குமோ அது போல்தான் இசையமைத்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு இந்த மாதிரியான இசை பெரிதும் கவரவில்லை. ஆனால் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடனமாடியுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.

Also read: காசு வந்ததும் புத்தியை காட்டிய சிவகார்த்திகேயன்.. நொந்து போன இயக்குனர்