டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஓகோ.. ஆனால் கண்டிசன் போடும் சிவகார்த்திகேயன்.

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக தமிழில் விஜய் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர், ஜீவா – அருள்நிதி நடிப்பில் களத்தில் சந்திப்போம், ஜீவா – ஜெய் நடிப்பில் கலகலப்பு 2, அங்கே படங்கள் ஆகிய படங்கள் வெளியாகின தற்போதுகூட ஆர்யா – விஷால் கூட்டணியில் எனிமி படம் உருவாகியுள்ளது.

பிரம்மாண்ட படங்கள் எடுப்பது அதிக ரிஸ்க்கான வேலை என்பதால் ரிஸ்க்கை குறைப்பதற்காக இரண்டு ஹீரோக்களை நடிக்க வைத்து ரசிகர்களை கவரும் விதத்தில் இயக்குனர்கள் படத்தை இயக்கி வருகின்றனர். பொதுவாக தெலுங்கு சினிமாவில் இதுபோல இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பது அதிசயம். ஆனால் அங்கு கூட இப்போது இது சாதாரணமாக நடந்து வருகிறது.

இந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அனைத்து நடிகர்களுடனும் எந்தவித பாகுபாடுமின்றி நடித்து வருகிறார். விக்ரம் வேதா படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் பேட்ட படத்தில் ரஜினியுடன், அடுத்ததாக மாஸ்டர் படத்தில் விஜயுடன், தற்போது விக்ரம் படத்தில் கமலுடன் நடித்து வருகிறார்.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai

இந்நிலையில் தமிழில் முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயனிடம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது, எனக்கும் அதுபோன்ற கதைகளில் மற்ற கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பது சம்மதம்தான்.

ஆனால் இரண்டு கதாநாயகர்களுக்கும் திரையில் சமமான முக்கியத்துவம் இருக்கவேண்டும் என நிபந்தனை ஒன்றை முன்வைத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்