கேங்ஸ்டார் ஆகும் சிவகார்த்திகேயன்.. காமெடி, குத்தாட்டதுடன் வெளியான டான் டிரைலர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படம் பள்ளி பருவ காலத்தில் நடக்கும் அனுபவங்கள் மற்றும் அதன் பிறகு கல்லூரியில் தனது நண்பர்களுடன் சேட்டை செய்யும் மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

3 படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி பருவ காலத்தில் நடித்தது போல் பல வருடங்களுக்கு பிறகு தற்போது டான் படத்தில் பள்ளி மாணவனாக நடித்துள்ளார். இதனை பார்க்கும் போது ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக நடிப்பது சிறப்பாக உள்ளது என கூறி வருகின்றனர்.

கல்லூரியில் நடக்கும் சேட்டைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட டான் திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ன பண்ணுவான்னு நீ காட்டுன ஆனால் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் பிரின்ஸ்பல் ஆனா என்ன கட்டுவாங்க நான் காட்டுகிறேன் என எஸ் ஜே சூர்யா பேசும் வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Next Story

- Advertisement -