சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா நடிப்பில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்புக்கேற்றவாறு படத்தில் சிவகார்த்திகேயன் மில்லில் வேலை செய்யும் தொழிலாளியாக நடிக்கிறாராம். தனது ஒவ்வொரு படங்களிலும் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் சிவகார்த்திகேயன், இந்த படத்திலும் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தில் ரஜினி நடித்த மில் தொழிலாளி வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

படத்தில் முக்கால் வாசி நேரம் காக்கி பேண்ட், காக்கி சட்டை அணிந்துதான் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.