Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் செய்த இந்த ஒரு விஷயமே போதும் அவரை பாராட்ட.! வைரலாகும் வீடியோ
Published on
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன், இவர் கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் சீமா ராஜா திரைக்கு வந்து சில கலவையான விமர்சனங்களை பெற்றது.
சிவகார்த்திகேயன் தற்பொழுது சமூக அக்கறை உள்ள விஷயங்களை செய்து வருகிறார் இவர் கடைசியாக ஒரு பேட்டியில் கூட இனி மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பதற்கு விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.
இந்த நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயனின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் எது என்று சிவகார்த்திகேயன் சொல்லிக் கொடுக்கிறார், தற்போது இது போல் சிவகார்த்திகேயன் சமூக அக்கறையுள்ள காட்சிகளில் நடிப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது, இதை பல ரசிகர்கள் பாராட்டி உள்ளார்கள்.
