Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்யத்தை மீறிய சிவகார்த்திகேயன்.. ரகசியத்தை உடைத்த மதன் கார்க்கி

தன்னிடம் செய்து கொடுத்த சத்யத்தை சிவகார்த்திகேயன் மீறி விட்டதாக டுவிட்டரில் மதன் கார்க்கி கலாய்த்து இருக்கிறார்.

தொகுப்பாளராக திரையில் தோன்றிவர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சிக்காக பார்க்காதவர்கள் கூட சிவாவின் பேச்சை கேட்க டிவியை போடும் வழக்கம் உருவாகியது. தொடர்ந்து, விஜய் டிவில் டிவியில் பல வருடமாக ஆங்கரிங் செய்து வந்தவருக்கு தனுஷால் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. எதிர்நீச்சல் படத்தில் தொடங்கிய அவர் பயணம் இன்று வேலைக்காரன் வரை நீண்டுக்கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் இளம் நாயகர்கள் வரிசையில் முன்னணி இடத்தையும் தக்க வைத்து கொண்டார். சீமராஜா, சயின்ஸ் பிக்‌ஷன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

நடிப்பில் மட்டுமல்லாமல் சிவா பாடிய சில பாடல்களும் வைரல் ஹிட் அடித்தது. இதனால், கோலிவுட்டில் அவருக்கு பாடும் வாய்ப்புகளும் பெருகிறது. இதையடுத்து, தனது கல்லூரி நண்பர் அருண்ராஜ் காமராஜுக்காக ஒரு படத்தை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கனா என பெயரிடப்பட்டு இருக்கும் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து, அவரின் நண்பர் அனிருத்திற்காக பாடலாசிரியராகவும் அடுத்த தளத்திற்கு சென்றுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு சிவாவின் நண்பரும், இசையமைப்பாளருமான அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்று இருக்கும் கல்யாண வயசு பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதி இருக்கிறார்.

இதன் வீடியோவை சிவா தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அப்பதிவிற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒருவர் என்னிடம் பாடல் எழுத மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தார்கள். நானும் அவரிடம் நடிக்கவே மாட்டேன் என சத்தியம் செய்து இருக்கிறேன். இப்போது யார் அந்த சத்தியத்தை உடைத்தார் என பாருங்கள். க்யூட் வரிகள் சிவா. இத்தளத்திற்கு வரவேற்கிறோம் என்றார். உடனே பதில் அளித்த சிவா, சாரி ப்ரதர்.. எல்லாம் நட்புக்காக, இப்போ நீங்கள் நடிக்கலாம் எந்த தடையும் இல்லை. வாழ்த்துக்களுக்கு நன்றி என ட்வீட் தட்டியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top