Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் மரியாதை படம் வேஸ்ட் என்று சொன்ன இரண்டு முக்கிய பிரபலங்கள்.. டென்ஷனான சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிப்பின் நாயகன் என்றால் சிவாஜி கணேசன் தான். இன்று சினிமாவுக்கு புதிதாக வரும் நடிகர் நடிகைகளுக்கு பலரும் நடிப்பு பயிற்சி செய்ய பரிந்துரை செய்வது சிவாஜி கணேசன் படங்கள் தான்.
அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பல படங்களில் முதல் மரியாதை படத்திற்கு எப்போதுமே முதலிடம் உண்டு. எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார். மேலும் முதல் மரியாதை படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் பலரது பேவரைட்.
பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் போன்றோர் நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் முதல் மரியாதை. அதுவரை வந்த சிவாஜி படங்களில் சற்று மாறுபட்ட படமாக வெளிவந்தது.
பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய முதல் மரியாதை படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது முதல் மரியாதை தானாம்.
அப்பேர்பட்ட முதல் மரியாதை படத்தை தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக அந்த காலகட்டத்தில் இருந்த இருவர் படம் சரி இல்லை என்று கூறியது பாரதிராஜாவையும் சிவாஜியையும் சோகத்தில் ஆழ்த்தியதாம். அவர்கள் வேறு யாருமில்லை.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருந்த பஞ்சு அருணாச்சலம் மற்றும் இசைஞானி இளையராஜாதான். பஞ்சு அருணாச்சலம் படம் பார்த்துவிட்டு படம் சரியில்லை என இளையராஜாவிடம் கூறியதால் அவரும் படம் பார்த்துவிட்டு படம் ஓடுமா என யோசித்தாராம்.
ஆனால் சிவாஜிகணேசன் கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என சவால் விட்டதை தொடர்ந்து படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வசூல் மழை பொழிந்து விட்டதாம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

muthal-mariyathai-cinemapettai
