3 வருடங்கள் ஓடிய சிவாஜியின் ஒரே படம்.. நடிகர் திலகம் இலங்கையில் செய்த மிகப்பெரிய சாதனை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சினிமா துறையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம். உலக சினிமா கலைஞர்களால் வியந்து பார்க்கப்பட்ட நடிகர் தான் சிவாஜி கணேசன். சொந்த மாநிலத்தில் ஒரு படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடுவது என்பதே அப்போதைய சாதனை தான். சிவாஜியின் படம் அண்டை நாட்டில் ஆயிரம் நாட்கள் வெள்ளித்திரை கண்டிருக்கிறது.

70களின் இறுதியில் இந்தியா மற்றும் இலங்கை தயாரிப்பு நிறுவனம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக திட்டமிட்டு இருக்கிறது. இந்திய சினிமா நடிகர்களிலேயே இலங்கை மக்களுக்கு நெருக்கமானவர் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அதனால் அவரை இந்த படத்தில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மெழுகு பொம்மை என்னும் நாடக கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது.

Also Read:சிவாஜியின் இந்த படத்தால் தூக்கத்தைத் தொலைத்த சிவகுமார்.. 10 வயதில் பைத்தியம் பிடித்த சினிமா ஆசை

1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் என்னும் பெயரிடப்பட்ட இந்த படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியானது. இலங்கையில் ரிலீஸ் ஆவதால் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்தும் விதமாக அப்போது இலங்கையில் பிரபல ஹீரோயின் ஆக இருந்த மாலினி பொன்சேகா இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மேஜர் சுந்தர்ராஜன், சச்சு, விஜயகுமார், சத்யபிரியா ஆகியோரும் நடித்திருந்தனர். இரண்டு மகன்கள் மற்றும் கண் தெரியாத ஒரு மகளை கொண்ட சிவாஜி கணேசனின் வாழ்க்கையில் அவருடைய மனைவியான மாலினி பொன்சேகா இறந்த பிறகு வரும் கடிதம் தலையில் இடி இறக்கியது போல் அமையும். அதன் பின்னர் உள்ள கதை களம் ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும்.

Also Read:எம்ஜிஆர் முன்பே சிவாஜியை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த தள்ளிய பிரபலம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

இந்தியா மற்றும் இலங்கை மக்களை கவர்ந்த இந்த படம் இந்தியாவில் 100 நாட்களை கடந்து ஓடியது. இலங்கையில் இந்த படம் ஆயிரம் நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. அதாவது கிட்டதட்ட மூன்று வருடம் இலங்கை நாட்டின் ஓடிய ஒரே இந்திய திரைப்படம் பைலட் பிரேம்நாத் தான். இந்த சாதனையை வேறு எந்த படங்களும் முறியடிக்கவில்லை.

திரைக்கதை மன்னன் ஆரூர் தாஸ் இந்த படத்திற்கு வசனம் எழுதி இருந்தார். திரிலோக் சந்தர் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். சினி இந்தியா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 1978 ஆம் ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட பைலட் பிரேம்நாத் ரிலீஸ் ஆகி 44 வருடங்கள் ஆகியும் இன்று வரை இந்த படம் பேசப்பட்டு வருகிறது.

Also Read:ரீமேக் ஆகப்போகும் சிவாஜியின் வரலாற்றுக் காவியம்.. அவர் அளவுக்கு யாராலும் நடிக்க முடியாது!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்