எம்ஜிஆருக்காக விட்டுக்கொடுத்த சிவாஜி.. மக்கள் திலகத்தின் வாழ்க்கையே மாற்றிய திரைப்படம்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்தவர்கள் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ஹீரோக்களை போல் இல்லாமல் அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவருமே சினிமாவுக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களில் கடினமாக உழைத்தவர்கள். மேடை நாடகங்களில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர்கள். இதில் மக்கள் திலகம், நடிகர் சிவாஜி கணேசனுக்கு முன்பே சினிமாவுக்குள் வந்து விட்டார்.

Also Read: இந்திய சினிமாவில் சிவாஜிக்கு இழைக்கப்பட்ட துரோகம்.. நடிகர் திலகத்துக்கு மறுக்கப்பட்ட தேசிய விருது

1930 ஆம் ஆண்டு இறுதியில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் எம் ஜி ஆர். ஆனால் இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவருக்குப் பின் வந்த சிவாஜி கணேசன் தான் ஒருவகையில் எம்ஜிஆரின் திரை பயணத்தை தொடங்கி வைத்தது.

1952 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படமான பராசக்தி மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிவாஜி கணேசன். அந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு தமிழ் சினிமா சிவாஜி கணேசனின் கைகளில் தான் இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Also Read: மண் வாசனையுடன் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பாரதிராஜாவின் 6 படங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படம்

அந்த நேரத்தில் சிவாஜிக்கு வந்த வாய்ப்பு தான் மலைக்கள்ளன் திரைப்படம். இந்த படத்திற்கு வசனம் எழுதியது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அந்தப் பட வாய்ப்பை எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். இதனால் மக்கள் திலகத்துக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அடையாளம் கிடைத்திருக்கிறது.

சிவாஜி கணேசன் கொடுத்த மலைக்கள்ளன் திரைப்படத்தின் வாய்ப்பினால் தான் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் கிடைத்ததாக மக்கள் திலகமே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் இவர்கள் இருவருடைய பாதையும் அரசியல் பார்வையில் பிரிந்தாலும் கடைசி வரை இருவருமே நல்ல நட்பை பாராட்டி வந்தனர்.

Also Read: சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்