சிவாஜி கடைசிவரை நடிக்க முடியாமல் போன கதாபாத்திரம்.. பின்னாளில் சத்யராஜ் நடித்த கதை

நடிப்பின் பல்கலைகழகம் என அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கடைசிவரை இருந்ததாகவும், அது நிராசையாக போனதாகவும் ஒரு செய்தி கிடைத்துள்ளது.

சிவாஜி கணேசன் ஏற்று நடித்திராத கதாபாத்திரங்களே கிடையாது. வீரமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, வெகுளித்தனமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, அதே நேரத்தில் எதார்த்தமான படங்களிலும் சரி, நடிப்பில் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.

sivaji-cinemapettai
sivaji-cinemapettai

அதுவும் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் சிவாஜியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம்.

தன் உயிர் மூச்சு இருக்கும் வரை அந்த முயற்சியில் இருந்த சிவாஜி கணேசனுக்கு நிராசையாக போய்விட்டது. ஆனால் சிவாஜியின் ஆசை அப்படியே போய்விடக்கூடாது என்பதற்காக பின்னாளில் பெரியார் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

periyar-sathyaraj-cinemapettai-01
periyar-sathyaraj-cinemapettai-01

இந்த மாதிரி படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்தால் காலம் கடந்தும் பேசப்படும் என்பதை உணர்ந்து சத்யராஜ் நடித்திருந்தார்.

பெரியாராக நடித்திருந்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அச்சு அசல் பெரியார் போலவே நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் சத்யராஜ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்