Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் மரியாதை படத்தில் முதலில் சிவாஜி இல்லையாம்.. மிகப்பெரிய வாய்ப்பை கோட்டை விட்ட பிரபலம்
சிவாஜி கணேசனின் பிரம்மாண்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் முதல் மரியாதை. இந்த திரைப்படம் அவர் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது. பாரதிராஜா இயக்கி, தயாரித்து வெளியிட்ட படம் 1985 வெளிவந்தது.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார், அனைத்து பாடல்களுமே இன்று வரை ரிப்பீட் மோடில் கேட்கும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த பாடல்கள். இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நூறு நாட்களை தாண்டி பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு சில்வர் ஜூப்ளி படமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திற்காக பெஸ்ட் லிரிசிஸ்ட் அவார்டு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது, பாரதிராஜா நேஷனல் பிலிம் அவார்டு பெற்றார், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி மற்றும் ராதா தட்டிச் சென்றனர்.
பாரதிராஜா இந்த படத்தின் கதையை முதலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமிடம் கூறியுள்ளாராம். ஆனால் அவர் நடிக்க மறுத்து பின்பு சிவாஜிக்கு இந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாக அவரே மேடையில் தெரிவித்திருப்பார்.
ஒருவேளை இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்திருந்தால், இசையை மூச்சாகக் கொண்ட எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு மாபெரும் நடிகராக தமிழ் சினிமாவிற்கு கிடைத்து இருப்பார். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லது தான் எஸ்பி பாலசுப்ரமணியம் தனது குரல் வலிமையால் தமிழ் சினிமாவில் ஒரு இசை சாம்ராஜியத்தை உருவாக்கி விட்டார்.
பாரதிராஜா மற்றும் சிவாஜியின் கூட்டணியில் வெளிவந்த இந்த படம் இன்று வரை தமிழ் சினிமாவின் அழியாக் காவியமாக பார்க்கபடுகிறது.
