விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு பிரபலங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து வருகின்றன. தமிழ் சினிமாவுக்கு என்பதைவிட தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் ஏகப்பட்ட பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சினிமாவில் வாய்ப்பு கிடைத்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டனர்.
அதிலும் அஸ்வின், சிவாங்கி, புகழ் போன்றோர் அடுத்தடுத்து தொடர்ந்து வெள்ளித்திரையில் காலடி பதிக்கவுள்ளனர். மேலும் இந்த சீசனில் அஸ்வின் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறுவதற்கு காரணமாக இருந்தவரே சிவாங்கி தான்.
அஸ்வினை சைட் அடிப்பது போன்றும், அவரைப் பார்த்து ஜொள் வடிப்பதை போன்றும் அவர் நடந்து கொண்ட விஷயங்களும் சின்னச்சின்ன க்யூட் நடவடிக்கைகளும் அவரை சூப்பர் ஸ்டார் நடிகை ரேஞ்சுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
அடிப்படையில் சிங்கரான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கு நடிப்பிலும் திறமை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டினார். இந்நிலையில் அஸ்வின் சிவாங்கியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதிலிருந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு தான் தற்போது இணையங்களில் செம வைரலாகி வருகிறது. உண்மையாலுமே அஸ்வின் இவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெறுவதற்கு முழுக்க முழுக்க காரணம் சிவாங்கி தான் என்றால் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.