நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை பொன்ராம் தான் இயக்குகிறார், இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது தற்பொழுது சினிமா ஸ்ட்ரைக் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

SivaKarthikeyan
SivaKarthikeyan

இதை தொடர்ந்து சிவா நடிக்க இருக்கும் படம் பெயரிடப்படாத ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோ தான் தயாரிக்க இருக்கிறது, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார், மேலும் ராகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக அறிவித்த்துள்ளர்கள், இந்த படம் தான் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக நடிக்க இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.

மேலும் இந்த படத்திற்கு ஒளிபதிவு பணிகளை கவனித்துகொல்கிறார் நிரவ் ஷாவும், அதுமட்டும் இல்லாமல் கலை பணிகளை முத்துராஜிம் கவனித்து கொள்ளபோகிறாராம் இதை படைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள், கலை இயக்குனர் ஏற்க்கனவே வேலைகரன் படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிக்குமார் முதல் படத்தில் டைம் மிஷின் தற்பொழுது வேற்று கிரக வாசிகளிடம் இருந்து மனிதனை காப்பாற்றும் கதையை கையில் எடுத்துள்ளார் படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானி கெட்டப் போடுகிறார் சிவா.இந்த படத்தில் மிக முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளதால் படம் தாறுமாறாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.