சிறுத்தை, வீரம், வேதாளம் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் சிவா. தற்போது மூன்றாவது முறையாக தல அஜித்துடன் விவேகம் படத்தில் கைக்கோர்த்து அப்படத்தையும் முடித்துவிட்டார்.

இந்நிலையில் சிவா அடுத்து எந்த ஹீரோவை இயக்குவார் என பல கேள்விகள் சுற்றி வருகின்றது, ஏனெனில் குறைந்த நாட்கள் படப்பிடிப்பு, கமர்ஷியல் பார்முலா என தொடர் ஹிட் கொடுத்து வருகின்றார் சிவா.

அதிகம் படித்தவை:  மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் படம் ஹிட் என்பதே கடைசி பேச்சாக இருக்கின்றது, தற்போது சிவா மீண்டும் அஜித்துடன் கைக்கோர்க்க உள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகின்றது.

இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது, அதே நேரத்தில் சிவகார்த்திகேயனிடமும் சிவா ஒரு கதையை கூறி ஓகே செய்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.

அதிகம் படித்தவை:  நடிகர் தனுஷ் கிடைத்தால் எந்த எல்லைக்குச் செல்ல தயார் பிரபல நடிகை !

அதனால், அஜித் அல்லது சிவகார்த்திகேயன் இவர்களில் யாராவது ஒருவர் தான் சிவா படத்தின் அடுத்த கதாநாயகர்கள் என தெரிகின்றது. ஆனால், இதில் எதுவுமே அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.