Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவாவின் Mr லோக்கல் படம் எந்த படத்தின் ரீமேக் தெரியுமா.? மீம்ஸில் வச்சி செய்யும் ரசிகர்கள்.!
சிவாவின் Mr லோக்கல் படம் எந்த படத்தின் ரீமேக் தெரியுமா.?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் Mr லோக்கல், இந்த திரைப்படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறார் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வருகிறார்கள். பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

memes
இவரின் கலகலப்பான காமெடி, டான்ஸ், என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது இந்த நிலையில் சிவாவின் பிறந்தநாளுக்கு மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர் வெளியானது, இந்த டீசர் சிவா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் பலர் சமூக வலைதளங்களில் இந்த டீசரை பற்றி மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள், இந்த டீசரை பார்த்தால் ரஜினி நடித்த மன்னன் படத்தைப் போல் இருக்கிறது என கூறுகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் NGK டீசரையும் MR லோக்கல் டீசரையும் வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து வருகிறார்கள்.

memes
