வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் சிறுத்தை சிவா.. பெயரை நிலை நிறுத்திய படத்தோடு வருகிறது கங்குவா2

நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது கங்குவா படம். இந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்து வருகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையில் சூர்யா இரண்டு கெட்டப்பில் வருகிறார். கங்குவா மற்றும் பிரான்சிஸ் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் நடிக்கிறார் சூர்யா

கங்குவா படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்தாலும், அவரையும் தாண்டி முக்கியமான நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ளார். பாகுபலி படத்திற்கு இணையாக தமிழிலும் படம் எடுக்க முடியும் என இயக்குனர் சிறுத்தை சிவா கங்கணம் கட்டி கங்குவா படத்தை எடுத்துள்ளார்.

சூர்யாவின் தம்பி கார்த்தி இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை சீக்ரெட் டாக வைத்துள்ளார் சிறுத்தை சிவா. இப்பொழுது வந்த புது ட்ரெய்லரில் கிளைமாக்ஸ் காட்சிகளில் கார்த்தி அகோரமாய் சிரிப்பது தெளிவாக தெரிகிறது.

இதுதான் கங்குவா படத்தின் செகண்ட் பார்ட் லீடாக வைத்துள்ளார் சிறுத்தை சிவா. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளி வருகிறது. இதைப்போல அடுத்து சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் சிறுத்தை சிவா ரெடி பண்ணி விட்டாராம். கூடிய விரைவில் அதனுடைய சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார்.

2011ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளிவந்த படம் சிறுத்தை. கார்த்தி இந்த படத்தில் ரத்தினவேல் பாண்டியன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தால். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கார்த்தி நடிப்பில் உருவான இந்த படம் தான் இயக்குனர் சிவாவிற்கு, சிறுத்தை சிவா என்ற ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இப்பொழுது எடுக்கவிருக்கிறார் சிவா.

- Advertisement -

Trending News