‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது தவிர கைவசம் ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் படம் மற்றும் விக்னேஷ் சிவன் படம் உள்ளது.

சந்தோஷ்சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கும் த்ரில்லர் படமான வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது.

velaikaran

கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் தம்பிராமையா போன்ற பெரும் நட்சத்திர நடிகர்கள் வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் படத்திற்கு எப்போதும் இசை அமைக்கும் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெமோ படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா-வே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப்பணிகள் நடந்துவரும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியது அதன் படி அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார்.

மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் கிடுகிடுவென வளர்ந்தவர் சிவா கார்த்திகேயன், இவருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

sivakarthikeyan velaikaran
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் கைவசம் 4 படங்கள் உள்ளது‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடல் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்ததுஇப்படத்தை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடவுள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் சிங்கள் ட்ராக் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது, இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் வெளியாக உள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்துடன் சிங்கள் ட்ராக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.