Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு ப்ளாப் படம் கொடுத்ததற்கு அடுத்த 5 படத்தையும் எழுதி வாங்கிய தயாரிப்பாளர்.. வருத்தத்தில் சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்கள் தோல்வியடைந்தாலும் இன்னும் படவாய்ப்புகள் சிவகார்த்திகேயனுக்கு குவிந்து தான் வருகிறது.

ஏனென்றால் குழந்தைகள் மற்றும் பெண்களை கவரும் இவரின் நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது டாக்டர்,அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் படத்தைப் பொறுத்தவரை இன்னும் 20 நாட்கள் சூட் இருப்பதாகவும், டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், அயலான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் KJR ராஜேஷ் கிட்டத்தட்ட பத்து படங்களை தயாரித்து வருகிறாராம்.

சிவகார்த்திகேயனை பொருத்தவரை ஏதாவது படம் ஓடவில்லை என்றால் அடுத்த படத்தை நானே செய்கிறேன் என்று முன்வந்து இழப்பை சமன் செய்து விடுவாராம். அந்த அளவிற்கு சினிமாவில் ஒரு நல்ல பெயரை வைத்துள்ளார்.

ஏற்கனவே ஹீரோ படம் ப்ளாப் ஆனதால், டாக்டர் படத்தை நான் செய்து இழப்பை ஈடு கட்டுகிறேன் என்று சிவகார்த்திகேயன் முன்வந்தார், இந்த ஒரு விஷயத்தை பகடைக்காயாக மாற்றிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர்.

அதில் முக்கியமாக சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் மூன்று படங்களை எடுக்கலாம் என்று ஒப்பந்தம் செய்துள்ளாராம். அதற்கான முன் பணம் வழங்கப்பட்டு விட்டது, இதனால் சிவகார்த்திகேயன் காட்டில் பண மழைதான். டாக்டர்,அயலானை சேர்த்து மொத்தத்தில் 5 படங்களை சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி பிரீ புக்கிங் செய்து நடிகர்களை, தங்கள் வசம் வைத்து கொள்வதால் என்ன லாபம் என்று பார்த்தால், மார்க்கெட் இருக்கும் போதே இவர்களை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது மட்டும்தான் குறிக்கோள்.

ஆனால் அயலான், டாக்டர் படம் ஓடவில்லை என்றால் கொடுத்த அட்வான்சை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் எதற்கும் தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளாராம்.

Continue Reading
To Top