இந்திய தலைநகர் டெல்லியில் அண்ணன் ஒருவன் மர்ம கும்பலிடமிருந்து சகோதரிகளின் மானத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது, சந்திரசேகர் என்ற நபரே இவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு சந்திரசேகர் தனது இரண்டு சகோதரிகளுடன் Chhata கிராமத்திலிருந்து Deeg பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயற்சி செய்ததுடன் சகோதரிகளை பாலியல் ரீதியல் துன்புறுத்த முயன்றுள்ளனர்.

சந்திரசேகர் சகோதரிகளை பாதுகாக்க முயன்ற போது அவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.