Tamil Nadu | தமிழ் நாடு
அண்ணனை தான் திருமணம் செய்வேன் அடம் பிடித்த தங்கை.. கொலையில் முடிந்த விபரீத காதல்
தஞ்சை: அண்ணனை தான் திருமணம் செய்வேன் என தங்கை அடம்பிடித்த நிலையில் அது கொலையில் முடிந்துள்ளது.
திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஒரு ஊராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. இவர் ஒரு விதவை… 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த சிறுமி பிளஸ் 2 வரை படித்து உள்ளாள்.2 நாளைக்கு முன்னாடி, தாயும் மகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். பொழுது விடிந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் அம்மா பிணமாக கிடந்தார்.
என் அம்மாவை யாரோ அடிச்சி கொன்றுவிட்டார்கள் என்று மகள் கதறி கதறி அழுது கொண்டே பக்கத்து வீட்டில் சொல்லவும், அவர்கள் பதறியடித்து கொண்டு வந்து வீட்டிற்குள் பார்த்தனர் . அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக திருவையாறு போலீசுக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தினரை விசாரித்துவிட்டு மகளை பிடித்து விசாரணை நடத்தினர்.
மகள் முண்ணுக்கு பின் முரணாக பேசியதால் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது எல்லாத்தையும் ஒப்புக் கொண்டாள் மகள். என் சொந்தக்காரர் ஒருத்தரை நான் காதலிச்சேன்.. ஆனா எனக்கு அவர் அண்ணன் முறை.. இந்த காதல் விவகாரம் என் அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு.. அண்ணனை தங்கச்சி காதலிக்கலாமா? இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா, மானம் போயிடும்.
அதனால அவனை காதலிக்காதே.. என்று கண்டித்தார். இது எனக்கு எரிச்சலை தந்தது. அதனால், நாங்க ரெண்டும் ஊரை விட்டே சில தினங்களுக்கு முன்பு ஓடிட்டோம். ஆனால் எங்க அம்மா என்னை காணவில்லை என திருவையாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தாங்க. நான் மைனர் என்பதால், என்னை கடத்தி சென்ற என் காதலனை கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டார்கள்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்தார். வெளியே வந்ததும், என் அம்மாவை பார்த்து கேஸ் வாபஸ் வாங்கிடுங்கன்னு.. உங்க பொண்ணை எனக்கு கட்டிக்கொடுங்கன்னு கேட்டார். நானும் என் அம்மாகிட்ட இதை பத்தி எவ்வளவோ சொன்னேன். ஆனால் என் அம்மாவோ, முறை தவறிய உறவு இது? ஊர் உலகத்துல அண்ணன் தங்கச்சி கல்யாணம் பண்ணுவாங்களா? என் பொண்ணை உனக்கு கட்டித்தர விரும்பவில்லை என சொல்லி, அவரை திட்டி அனுப்பிட்டாங்க.
ஆனாலும் என் காதலன், கட்டினா உன்பொண்ணைதான் கட்டுவேன்னு சொல்லிட்டு போயிட்டார். இந்த விஷயமாதான் ராத்திரி எனக்கும் எங்க அம்மாவுக்கும் பிரச்சனை வந்தது. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. அப்போதான் என் அம்மாவை இரும்பு கம்பி எடுத்து தலையில அடிச்சி கொன்றுவிட்டேன் எனறார். இதையடுத்து, அந்த சிறுமியையும், அந்த காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
