Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் யார் தெரியுமா? க்ளூ – வீரம் படத்தில் தம்பிகளில் ஒருவர்
தல அஜித்துடன் வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படத்துக்குப் பின்னர் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் கைகோர்த்திருக்கிறார் சிவா. தற்பொழுது தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்று ஆகிவிட்டார். கோலிவுட்டில் சிறுத்தை சிவா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டும் சிவாவின் முதல் படம் சிறுத்தை இல்லை என்பதே உண்மை. ஆம் நம்மில் பலருக்கு தெரியாத சிவாவின் மறுபக்கம் ஒன்று உள்ளது.
சிவகுமார்
இவரின் தந்தை ஜெயக்குமார் டாக்குமெண்டரி போட்டோக்ராபர். இவரது தாத்தா வேலன் பிரபல தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அசிஸ்டன்ட் கேமராமேனாக சேர்ந்தார்.
தமிழில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் முன்பே சார்லி சாப்ளின் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். மேலும் தெலுங்கிலும் ஒளிப்பதிவாளராக பல படங்களில் வேலை செய்தவர். தெலுங்கில் கோபி சந்த் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு படம் இயக்கினார். அதன் பின் தான் கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கினார் .
பாலா
மலையாள சினிமாவில் நன்றாக அறியப்பட்ட ஒரு நடிகர். எனினும் 2003 இல் வெளியான “அன்பு” படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். தமிழில் இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் பிளாப் ஆக மலையாள சினிமாவிற்கு சென்றார். அங்கு சப்போர்டிங் நடிகராக நல்ல பெயர் கிடைத்தது. ஐவரும் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் மீண்டும் வீரம் படத்தில் நடித்தார். அஜித்தின் தம்பிகளில் ஒருவரான முருகன் வேடத்தில் நடித்தார்.
