புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அப்பனே முருகா.. படத்தை காப்பாத்திரு.. மரண பீதியில் சிறுத்தை சிவா

கங்குவா படம் பார்க்க இன்று காசி தியேட்டருக்கு சென்றார் சிவா. படத்தை பார்த்தவர் முகத்தில் அவ்வளவு சந்தோசம். ஆடியன்ஸ் கைதட்டல் கேட்கும்போது, அவருக்கு போதை தலைக்கு ஏறி விட்டது. இந்த நிலையில், தற்போது கங்குவா படத்துக்கு கலவையான விமர்சனம் தான் வந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலானோர், சூர்யா நடிப்பு அபாரம்.. ஆனால், அவரை இப்படி வேஸ்ட் செய்துவிட்டீர்களே என்று சிறுத்தை சிவாவை விமர்சித்து வருகின்றனர். சிறுத்தை சிவா அண்ணாத்த படத்தை செஞ்சுவிட்டார். தனக்கு தற்போது ஒரு நல்ல கம் பேக் தேவை என்று நினைத்தவர், பெரியோடிக் கதையை கையில் எடுத்தார்.

நெற்றியில் அடித்த விபூதி

இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு, சிறுத்தை சிவா செய்தியாளர்களிடம் “அமெரிக்காவில் படம் பார்த்த நண்பர்கள் எல்லாம் கால் பண்ணாங்க. மிகப் பெரிய வெற்றிப் படம்னு சொல்றாங்க. ரொம்ப ரொம்ப திருப்தியா, சந்தோஷமாக இருக்கு என்றார். அதை சொல்லும்போது சிவா முகத்தில் இருந்த சந்தோஷம் தனியாக தெரிந்தது.”

“படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. ஆடியன்ஸ் விசில் சத்தம் கேட்க்கும், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நிச்சயம் வெற்றி பெரும். ” என்று கூறியுள்ளார். இந்த நிலையில், என்ன தான் இவர் சந்தோஷமாக முகத்தை வைத்திருந்தாலும், லேசாக மரண பீதி தெரிகிறது.

படம் நன்றாக ஓட வேண்டும் என்று கோவிலுக்கு எல்லாம் போயி பிரார்த்தனை செய்திருக்கிறார். நெற்றி நிறைய பட்டையுடன் தான் படத்தையே பார்க்க வந்திருக்கிறார். இந்த நிலையில், ரசிகர்கள், இந்த பேட்டியை பார்த்துவிட்டு, “படம் நல்லா தான் இருக்கு.. ஆனா screenplay ல இப்படி சொதப்பிடீங்களே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News