fbpx
Connect with us

Cinemapettai

கழட்டிவிட்ட தல அஜித்.. வேறு வழியில்லாமல் பிரபல நடிகரிடம் தஞ்சமடைந்த சிறுத்தை சிவா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கழட்டிவிட்ட தல அஜித்.. வேறு வழியில்லாமல் பிரபல நடிகரிடம் தஞ்சமடைந்த சிறுத்தை சிவா!

தல அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிறுத்தை சிவா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்பதால் இந்த சமயத்தில் ஒரு கதையை ரெடி பண்ணி தல அஜித்தை வைத்து ஐந்தாவது முறையாக களமிறங்க திட்டம் கேட்டாராம் சிறுத்தை சிவா.

ஆனால் தல அஜித் ஏற்கனவே வலிமை படத்தில் 40% படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்த நிலையில் அந்த படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக மாட்டேன் என தெரிவித்து விட்டாராம்.

இதனால் சோகத்தில் இருந்த சிறுத்தை சிவா அடுத்தபடியாக சூர்யாவிடம் சென்றுள்ளார். சூர்யாவும் ரஜினி படத்துக்காக தன் படத்தை கைவிட்டுச் சென்ற சிறுத்தை சிவாவுக்கு பிறகு வாய்ப்பு கொடுக்கலாம் என தட்டிக் கழித்து விட்டாராம்.

தற்போது சிறுத்தை சிவா வேறு வழியில்லாமல் சீயான் விக்ரம் வசம் தஞ்சமடைந்துள்ளார். கோப்ரா படத்தின் பத்துநாள் படப்பிடிப்புகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படமும் விரைவில் முடிந்துவிடும் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளதால் சிறுத்தை சிவாவுக்கு ஓகே சொல்லி உள்ளார் விக்ரம். சிறுத்தை சிவாவும் எஞ்சியுள்ள அண்ணாத்த படப்பிடிப்புகளை முடித்து விட்டு வருவதாக கூறி விட்டாராம்.

இதனால் தமிழ் சினிமாவில் புதிய கூட்டணி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம். இருந்தாலும் அஜித்துடன் இணையும் போது சிறுத்தை சிவாவுக்கு இருந்த எதிர்பார்ப்பு ரஜினி பட அறிவிப்பு வெளிவந்த போது பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பதே உண்மை.

Continue Reading
To Top