புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ணோவ்! எங்கள வுட்டுரு ண்ணா.. களத்தில் சிவா, உஷாரான அஜித்

மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. நடிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த இயக்குனர் என்றே இவரை கூறலாம். தற்போது கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ள இவர், படுபயங்கரமாக ப்ரோமோஷன் செய்து, மக்களின் ரெஸ்பான்ஸை எதிர்நோக்கி இருக்கின்றார்.

இவர்,இயக்குனராக மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2011 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

நடிகர் அஜித்துக்கு மிகவும் பிரியமான இயக்குனர்களில் சிறுத்தை சிவாவும் ஒருவர். சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வீரம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி box office-ல் பட்டையை கிளப்பியது.

மீண்டும் இணையும் பழைய காம்போ

இந்த நிலையில், கங்குவா படத்திற்கு பிறகு, நடிகர் அஜித்துடன் சிவா மீண்டும் கூட்டணி போட போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் உஷாரான அஜித், பண்ணலாம் சிவா என்று சொல்லி வைத்த போனை பின்பு எடுக்கவே இல்லையாம்.

இந்த நிலையில், காத்திருந்தாள் வேலைக்கு ஆகாது என்று சிறுத்தை சிவா, தனது கதையை கார்த்தியிடம் கூறியிருக்கிறார். கார்த்திக்கு பிடித்து போக, அவர் கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே கார்த்தி, சர்தார் 2, படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக, மாரி செல்வராஜுடன் கூட்டணி போட போகிறார்.

இப்படி, இருக்க, அந்த படத்தை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் சிவா கதைகளை, ஒரு சிலர் விரும்பினாலும், இளம் தலைமுறைகள், ஒரு சிலவற்றை cringe என்று கேலி செய்கிறார்கள். தற்போது, இந்த தகவல் பரவ, “ணோவ் எங்களை வுட்டுரு னா..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News