Connect with us
Cinemapettai

Cinemapettai

shiva-vijay

Videos | வீடியோக்கள்

விஜய்யின் பத்ரி படத்தில் நடித்துள்ள சிறுத்தை சிவா.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய். அதேபோல் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் சிறுத்தை சிவா.

விஜய் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியவர் சிறுத்தை சிவா. தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்னும் படத்தை இயக்கிவருகிறார்.

இது ஒருபுறமிருக்க சிறுத்தை சிவா தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் விஜய் நடித்த பத்ரி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் ரசிக்கும்படி நடித்துள்ளார் சிறுத்தை சிவா. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் செம வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
To Top