fbpx
Connect with us

Cinemapettai

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து.. சதி வேலை காரணமா?

siruthavur-fire_Cinemapettai

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து.. சதி வேலை காரணமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சென்னை போயஸ் இல்லத்தில் தங்கி இருந்தார். அவருக்கு கோடாநாடு மற்றும் சிறுதாவூர் போன்ற இடங்களில் தனியாக சொகுசு பங்களாக்கள் உள்ளன. சென்னையை அடுத்துள்ள சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குவது வழக்கம்.

இந்த நிலையில், சிறுதாவூர் பங்களாவில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைத்தனர்.

தீ விபத்தை தொடர்ந்து சிறுதாவூர் பங்காளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. பிளவு பட்டிருந்த அதிமுகவை ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை சதி வேலையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top