சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சிறகடிக்கும் ஆசை சீரியல் முத்துவிற்கு கல்யாணம்.. சீரியல் நடிகையுடன் ஏற்பட்ட காதலுக்கு அடிக்கப் போகும் கெட்டி மேளம்

Sirakadikkum Asai Serial: சிறகடிக்கும் ஆசை சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் முத்து என்கிற வெற்றி வசந்த். இவருடைய நடிப்பு மக்களுக்கு பிடித்துப் போனதனால் தான் இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான நடிப்பும் மக்களை கவரக்கூடிய நாயகனாகவும் விஜய் டிவியில் ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

அப்படிப்பட்ட இவருக்கு பொன்னி என்கிற வைஷ்ணவி சீரியல் நடிகை உடன் காதல் ஏற்பட்டு விட்டது என்று சமீபத்தில் போட்டோ மற்றும் வீடியோ மூலம் வெளியானது. அத்துடன் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து முத்துவின் ரசிகர்கள் எப்பொழுது வெற்றிக்கு கல்யாணம் என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் கேள்வியை கேட்டு வந்தார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக முத்துவின் கல்யாணத்திற்கு கெட்டி மேளம் அடிக்கும் நேரம் வந்து விட்டாச்சு. அந்த வகையில் வைஷ்ணவியுடன் வெற்றி வசந்துக்கு வருகிற 28ஆம் தேதி அதாவது வியாழன் கிழமை கல்யாணம் நடக்கப் போகிறது.

muthu ponni
muthu ponni

ஆனால் எந்த இடத்தில் எங்கு வச்சு திருமணம் என்ற தகவல் மட்டும் தற்போது வரை வெளிவரவில்லை. அந்த வகையில் இவர்களுடைய கல்யாணம் சிம்பிளாக கோவிலில் வைத்து முடித்துவிட்டு வரவேற்பை மிகப் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள். இவர்களுடைய கல்யாணத்துக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து ஒற்றுமையாக சந்தோசமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News