fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அந்த மனசு தான் சார் கடவுள்! பயிற்சி போட்டியில் சிராஜின் நெகிழவைக்கும் வீடியோ- குவியது பாராட்டு

Sports | விளையாட்டு

அந்த மனசு தான் சார் கடவுள்! பயிற்சி போட்டியில் சிராஜின் நெகிழவைக்கும் வீடியோ- குவியது பாராட்டு

இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளனர். ஒரு நாள் போட்டிகளை ஆஸ்திரேலியா ஜெயிக்க, டி 20 யை இந்திய வென்றனர். விரைவில் டெஸ்ட் போட்டிகள் துவங்க உள்ளனர். முதல் டெஸ்டில் மற்றும் கோலி கேப்டன், அடுத்த மூன்றிலும் ரஹானே கேப்டனாக தொடர்வார்.

இதனை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றது. முதல் போட்டி ட்ரா ஆனது. இந்நிலையில் நேற்று பிங்க் பால் வைத்து போட்டி துவங்கியது டே/ நைட் போட்டியாக. டாஸ் வென்ற இந்தியா 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அதிரடியாக ஆடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா டீம், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கடைசி விக்கெட்டுக்கு பும்ரா மற்றும் சிராஜ் ஜோடி சேர்ந்து பௌலர்களை திண்டாட வைத்தனர். 45 வது ஓவரில், பும்ரா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேமரூன் கிரீன் பவுலிங் செய்தார். அவர் வீசிய அந்த பந்தை பும்ரா வேகமாக அடிக்க, அது நேராக பவுலரை நோக்கி சென்றது. பந்து வந்த வேகத்தில் அதைப் பிடிக்கத் தவறியதால் தலையில் அடித்தது. இதில் அவர் கீழே விழுந்து துடித்து போனார்.

இதைப் பார்த்த நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த முகமது சிராஜ் ரன் ஓடுவதை நிறுத்திவிட்டு தனது பேட்டை கீழே வீசி எறிந்துவிட்டு உடனடியாக ஓடி சென்று கேமரூனுக்கு உதவி செய்தார். நடுவருக்கு இணைந்தார். ஆனால், மறுபுறம் பும்ரா ரன் எடுக்க ஓடி நான் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு வந்துவிட்டார்.

ஆஸ்திரேலியா ஸ்லிப் மற்றும் விக்கெட் கீப்பர் கூட செய்யவது அறியாது முழித்த நேரத்தில், எதிரணி வீரர் காயம் அடைந்தவுடன் ரன் ஓடுவது முக்கியமல்ல, அவருக்கு உதவ முயன்ற சிராஜின் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. கன்கஸனில் கேமரூன் வெளியேற, அவருக்குப் பதிலாக பேட்ரிக் ரோவ் களமிறங்கினார்.

இன்றும் ஜென்டில் மென்ஸ் விளையாட்டு தான் என இது போன்ற சில சம்பவங்கள் தான் கிரிக்கெட்டை தூக்கி நிறுத்துகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top