Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ட்வீட்டால் மாட்டிக் கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் போட்ட ஒரே ட்வீட்டால் ரசிகர்களிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. படத்திற்காக ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் செம எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அதே வேளையில், அதற்கு சம அளவிலான எதிர்ப்பும் நிலவி வருகிறது. இத்தனை தடைகளை தாண்டி காலா படம் வெல்லுமா என நாளை தெரிந்து விடும். இப்படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 2.ஓ படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரம்மாண்டம் இல்லை படம் பிரம்மாண்டமாக இருக்கும் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்து இருக்கிறார். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். படத்தில் ரஜினிகாந்தின் நாயகி தேடுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்ரன் நடிப்பார் என ஒரு தகவல் வெளியானாலும், படக்குழு அதுகுறித்து எந்தவித உறுதியான தகவலை வெளியிடவில்லை.
படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் இமயமலை பகுதியில் படமாக இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட இருப்பதால், முதற்கட்ட பணிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு பெரும் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவில், தலைவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என குறிப்பிட்டு நிறைய கதாபாத்திரம் என ஹாஸ்டேக்கை தட்டி இருந்தார். இந்த ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவியது. ரஜினி ரசிகர்கள் இதை கொண்டாடவே தொடங்கினர். இதை தொடர்ந்து, நான் படத்தில் சொல்லவில்லை. அப்பாவின் வாழ்க்கையில் சொன்னேன் என தனது ட்வீட் மூலம் விளக்கம் அளித்தார்.
