fbpx
Connect with us

அஜித் பிறந்தநாளன்று அவர் புகழ் பாடும் சிங்கிள் பாடலை வெளியிடப்போகும் பிரபல தயாரிப்பாளர் !

News | செய்திகள்

அஜித் பிறந்தநாளன்று அவர் புகழ் பாடும் சிங்கிள் பாடலை வெளியிடப்போகும் பிரபல தயாரிப்பாளர் !

மே 1

உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி தான் அஜித்தின் பிறந்தநாள். இது தமிழகம் அறிந்த விஷயமே. இவருடைய நடிப்பு, ஸ்டைல் இதனை தவிர்த்து இவரது குணத்திற்கும் சேர்த்தே தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது.

thala ajith

நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என்று பெயர் எடுத்தவர் அஜித். இவருக்கென்று சினிமா துறையிலேயே பல ரசிகர்கள் உண்டு. நம் தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளுக்கு இவர் ரோல் மாடல் என்றால் அது மிகையாகாது.

இவர் பிறந்தநாளன்று ரத்த தானம், அண்ணா தானம் என்று பல நல் காரியங்களில் ஈடுபடுவர் இவரது ரசிகர்கள்.

ஆர். கே . சுரேஷ்

RK Suresh

பிரபல தயாரிப்பாளர் ஆர். கே . சுரேஷ். தரை தப்பட்டை படத்தின் வாயிலாக நடிகர் அவதாரம் எடுத்தார். வில்லனாக்க தொடங்கி, குணச்சித்திர வேடத்தில் நடித்து, தற்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

பில்லா பாண்டி

ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ் . இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கவுள்ளது படக்குழு. இந்நிலையில், அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே 1-ஆம் தேதி அஜித் புகழ் பாடும் ஒரு சிங்கிள் பாடலை, பில்லா பாண்டி படத்தில் இருந்து வெளியாக இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் அறிவித்திருக்கிறார்.

அஜித்தின் பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் “50DAYS TO SAMRAT AJITH BDAY” என்று ஹாஸ் டாகிட்டு ட்விட்டரில் ட்ரெட்ண்டிங் செய்கின்றனர். கூடவே இந்த பாடல் அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top