Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு ஜம்புக்காக 100 முறை பயிற்சி.! “MI” படத்துக்காக 25,000 அடி உயரத்திலிருந்து குதித்த டாம் குரூஸ்
ஹாலிவுட்டில் ஒரே தலைப்பில் அடுத்தடுத்த படங்கள் ஒரு சீரியஸாக வெளிவருவது வழக்கம்.. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் முதல், மம்மி வரையிலான இந்த லிஸ்ட் கொஞ்சம் நீளமானது. அந்த வரிசையில் முக்கியமானது டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் சீரியஸ் படங்கள். அதிரடி, ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களைக் கட்டிப்போகும் மிஷன் இம்பாசிபிள் சீரியஸின் முதல் படம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியானது. இந்த சீரியஸில் இதுவரை 5 படங்கள் வெளியாகியுள்ளது. இதன் ஆறாவது பாகம் வரும் ஜூலை 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
மிஷன் இம்பாசிபிள் – ஃபால் அவுட் படத்தின் ஷூட்டிங் அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டாம் குரூஸ் படத்தின் புரமோஷன் வேலைகளை மறுபுறம் தொடங்கிவிட்டார். வசூலில் சக்கைபோடு போடும் மிஷன் இம்பாசிபிள் சீரியஸில் அடுத்ததாக வெளிவரும் ஃபால் அவுட் படத்தை ஜான் மெக்குயர் இயக்கியிருக்கிறார். முந்தைய பாகங்களில் டாம் குரூஸூடன் நடித்திருந்த சைமன் பெக், அலெக் பால்ட்வின் போன்றோர் இந்த படத்திலும் இருக்கின்றனர். மிஷன் இம்பாசிபிள் – ஃபால் அவுட் என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்தது. சமூக வலைதளங்களில் வைரலான அந்த டிரெய்லரில் போர் விமானத்தில் இருந்து டாம் குரூஸ் குதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
அந்த காட்சியில் டூப் போடாமல் நடித்து டாம் குரூஸ் அசத்தியிருந்தார். 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து குதிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. போர் பயிற்சி பெற்ற தேர்ந்த வீரர்களால் மட்டுமே அந்த சாகசத்தைச் செய்ய முடியும். ஹைக் ஆல்டிடியூட் லோ ஓபனிங் (high altitude, low opening) குதித்தல் என்றழைக்கப்படும் அந்த சாகசம் பொதுவாக ஹாலோ ஜம்ப் என்று அழைக்கப்படுகிறது. விமானத்தில் இருந்து குதிக்கையில் கர்ணம் தப்பினால் மரணம் என்பதுதான் நிலை. அதேபோல், இந்த ஜம்ப்பில் மன அழுத்தம் அதிகரிப்பது. அவநம்பிக்கை ஏற்படுவது, மூளையின் செயல்பாடுகள் உறைந்துபோவது மற்றும் உடல் திசுக்களில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு ஸ்பாட்டிலேயே உயிரிழப்பது என பல ரிஸ்குகள் இருக்கின்றன. ஆனால், ரிஸ்கெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி பாஸ் என அசால்டாக இந்த சாகசத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் டாம் குரூஸ்.
இந்த சாகசத்துக்காக தினசரி 5 ஜம்புகள் வீதம் சுமார் 100 முறைக்கு மேல் ரிகர்சல் பார்த்திருக்கிறார்கள். அதேபோல், தினமும் சூரியன் மறையும் முன்பாகக் கிடைக்கும் கடைசி 3 நிமிடங்கள்தான் டைம்.. அதற்குள் ஷுட் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் கடுமையான பயிற்சிகளையும் டாம் குரூஸ் மேற்கொண்டிருக்கிறார். விமானத்தில் இருந்து குதிப்பதற்கு முன்பாக மிகப்பெரிய ஏர் டனல் ஒன்றை உருவாக்கி அதில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது நாயகனுக்கு. அவருடன் கேமிரா உதவியாளர்கள் சிலரும் படம் பிடிப்பதற்காக விமானத்தில் இருந்து குதித்திருக்கிறார்கள். இந்த சாகசம் நிகழ்த்தப்பட்ட விதம் குறித்த மேக்கிங் காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். 2 நிமிடம் 37 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் டாம் குரூஸ் செய்யும் சாகசங்களைக் கண்டு மகிழுங்கள். ஒரு ஹை ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத த்ரில்லிங்குடன் இருக்கிறது.
