fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

42 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி.. வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் போதே இப்படி!

actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

42 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி.. வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் போதே இப்படி!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல பாடகியாக கடந்த 25 வருடங்களாக இருப்பவர் திடீரென 42 வயதில் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பெரும்பாலும் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் வயது வித்தியாசம் இல்லாமல் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் பிரபல பாடகி இப்படி செய்துள்ளது அனைவருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது. மேலும் தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகள் இருப்பதும் அவருக்கு நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகியாக இருப்பவர் சுனிதா. அது 1995 ஆம் ஆண்டு தன்னுடைய பாடகி கேரியரை தொடங்கிய சுனிதா தற்போதுவரை பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 110 படங்களில் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

இப்படி இரண்டு சினிமாவிலும் நல்ல பெயரை எடுத்து வைத்துள்ள சுனிதா தற்போது திடீரென தனது 42வது வயதில் இரண்டாவது திருமணத்தை அறிவித்துள்ளார். ராமகிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

sunitha-singer

sunitha-singer

சுனிதாவுக்கு ஏற்கனவே 18 வயது கடந்த மகள் மற்றும் மகன் இருவரும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போதே இரண்டாவது திருமணத்திற்கு ஆசை எப்படி வரும் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

sunitha-rama-krishnan

sunitha-rama-krishnan

தன்னுடைய 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதா அதன் பிறகு சில வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து விட்டதாக தெரிகிறது. தன்னுடைய மகள் மற்றும் மகன் ஆகிய இருவரின் வருங்காலத்தை கருதி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top