கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையுலகில் உள்ள  நட்சத்திரங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை தனது  ட்விட்டர் பக்கத்தில் போட்டு திரையுலகில் உள்ள அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியவர் சுசித்ரா.

இதனை அடுத்து நடுவில் கொஞ்ச நாள் எங்கே போனார் சுசித்ரா என்று கேள்விகள் எழுந்தது.

தற்போது இதுகுறித்த பதில்களை சுசித்ரா தெரிவித்துள்ளார் . தற்போது அமெரிக்காவில் இருக்கும் சுசித்ரா, தன்னுடைய  டுவிட்டர் கணக்கில் வெளியான சர்ச்சைக்குரிய பதிவுகளால் மனநலக்குறைவு ஏற்பட்டதாகவும் இரவு பகலாக புலம்புவதாகவும் கூறுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  பிளஸ் 2 ரிசல்ட்: டாப் 3 பெஸ்ட் மற்றும் மோசமான மாவட்டங்கள் இவைதான்!

தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும் கூறியுள்ளார் . மேலும் தனது  டுவிட்டர் பக்கத்தில் வெளியான பதிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இதன் காரணமாக திரையுலக நண்பர்கள் தனது நட்பை கைவிட மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.