Home Tamil Movie News பாத்ரூமில் ஒளிந்திருந்த நடிகர் ஜீவா, மஜாவான தொகுப்பாளினி.. சுசித்ரா ஓப்பன் டாக்

பாத்ரூமில் ஒளிந்திருந்த நடிகர் ஜீவா, மஜாவான தொகுப்பாளினி.. சுசித்ரா ஓப்பன் டாக்

Jiiva Suchitra
Jiiva Suchitra

Actor Jiiva: தமிழ் சினிமா ஹீரோக்களில் இதுவரை எந்த ஊரு கிசு கிசுவிலும் மாட்டாதவர் நடிகர் ஜீவா. அவரைப் பற்றி சமீபத்தில் பாடகி சுசித்ரா ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகை மீடு புகார்கள் ஆக்கிரமித்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகரின் பெயர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சுசித்ரா இப்படி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். இந்த மீ டூ புகார்கள் எல்லாம் வருவதற்கு முன்பே சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய நட்பு வட்டாரத்தை பற்றி பேசி தமிழ் சினிமாவில் புயலை கிளப்பினார் பாடகி சுசித்ரா.

மலையாள சினிமா ஹீரோ நிவின் பாலி பற்றி வந்திருக்கும் புகார் இருக்கு சுசித்ரா ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். நிவின் பாலிக்கு சென்னையில் படப்பிடிப்பு இருக்கும்போது சிலர் அவரை பார்ட்டிகளுக்கு அழைப்பதுண்டு.

சுசித்ரா ஓப்பன் டாக்

அப்படி அவர் அங்கு போகும்போது கூட பெண்களிடம் ரொம்பவும் கண்ணியமாக நடந்து கொள்வார். ஒரு சில பெண்கள் அவர் மீது ஆசைப்பட்டு நெருங்கினாலும் அவர் அதற்கான இடத்தை கொடுக்க மாட்டார். இதனால் அவர் ஆண் இல்லை என்று கூட சிலர் கிண்டல் அடிப்பது உண்டு.

சினிமாவை பொறுத்த மட்டிலும் ஆண்கள் மட்டும் இல்லை, பெண்கள் மீதும் சில தப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல் நடிகர் ஜீவாவும் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் உஷாரான ஆள். இது போன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் ஜீவா ஒரு சில நடிகைகளை பார்த்தால் ஒதுங்கி விடுவார்.

சில நடிகைகளை பார்த்து அவர் பாத்ரூமில் ஒளிந்து கொண்ட சம்பவம் கூட நடத்தி இருக்கிறது. அதேபோன்று சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினி இருக்கிறார். அவருக்கு சில நடிகர்களுடன் பழக்கம் இருக்கிறது. அவரே ஏதாவது ஒரு பார்ட்டியில் பார்த்தாலே ஜீவா ஓடிவிடுவார்.

இது பற்றி அவர் என்னிடம் பகிர்ந்தது கூட உண்டு என சுசித்ரா சொல்லி இருக்கிறார். சுசித்ராவின் இந்த பேட்டைக்கு பிறகு யார் அந்த தொகுப்பாளினி என்பது பல நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.

மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை

- Advertisement -spot_img