செல்வராகவன் -ஆண்ட்ரியாவின் அந்த வீடியோ, தனுஷை ஹோட்டலில் சந்தித்தேன்.. பகீர் கிளப்பிய சுசித்ரா

Suchithra: மலையாள சினிமா உலகை மீ டு புகார்கள் புரட்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் சுசித்ரா வாயை திறந்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரையும் பற்றி பேசி பேட்டிகள் கொடுத்தார் சுசித்ரா.

அதிலும் நடிகர் தனுஷை பற்றி அவர் பகிர்ந்த விஷயங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டது. அந்த பேட்டிகளுக்குப் பிறகு அமைதியாக இருந்த சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் மலையாள சினிமா உலகத்தில் நடந்து வரும் பிரச்சனைகளை பற்றி பேசி இருக்கும் அவர் தமிழ் சினிமா பற்றியும் பேசி இருக்கிறார். இதில் இயக்குனர் செல்வராகவன் பற்றி அவர் சொன்ன விஷயம் தான் பகிர் கிளம்பி இருக்கிறது.

பகீர் கிளப்பிய சுசித்ரா

தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று ரசிகர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காதல் கொண்டேன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனியில் தன்னுடைய இயக்கத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்தில் நடந்த பிரச்சனையின் காரணமாக விவாகரத்தும் நடந்து விட்டது. அதன் பிறகு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் செல்வராகவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் விவாகரத்து சமயத்திலேயே இதற்கு காரணம் ஆண்ட்ரியா என்று சொல்லப்பட்டது. பல கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் பின்னர் அந்த விஷயம் அப்படியே மறைக்கப்பட்டது.

தற்போது அதை பற்றி தான் சுசித்ரா பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் சுசித்ரா தனுஷ் எனக்கு தம்பி மாதிரி. அவர் செய்த ஒரு பிராங்க் தான் என்னை இந்த அளவுக்கு பேச தூண்டியது. இந்த பிரச்சனைகளுக்கு அப்புறம் எல்லாம் நான் தனுஷை தாஜ் ஹோட்டலில் சந்தித்தேன்.

மதியம் லஞ்சுக்கு வா என்று கூட கூப்பிட்டேன். தனுஷ் நல்ல பையனாக தான் இருந்தார். கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் கூட்டத்துடன் இணைந்து தான் இப்படி கெட்டுப் போய்விட்டார். பல வருடங்களுக்கு முன் தனுஷ் என்னை ஒரு ஷார்ட் ஃபிலிம் நடிப்பதற்காக அழைத்திருந்தார்.

இப்படித்தான் ஒரு ஷார்ட் ஃபிலிம் நடிக்கும் பொழுது, செல்வராகவன் மற்றும் ஆண்ட்ரியா காம்ப்ரமைஸ் வீடியோ இருக்கிறது என்று சொன்னார்கள். எல்லாம் சினிமாவுக்காக தான் என்று சொல்லி ஏதாவது ஒரு பிரச்சனையில் இழுத்து விட்டு விடுவீர்கள்.

எனக்கு வேண்டாம் என மறுத்து விட்டதாக சுசித்ரா சொல்லி இருக்கிறார். இந்த பேட்டியின் மூலம் மறந்து கிடந்த செல்வராகவன், ஆண்ட்ரியா பிரச்சனை மீண்டும் கிளரப்பட்டு இருக்கிறது.

மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை

- Advertisement -spot_img

Trending News