fbpx
Connect with us

Cinemapettai

ஒய்.ஜி.மகேந்திரனை ட்விட்டரில் தெரிக்கவிட்ட சின்மயி.. குடியுரிமை சட்டம்.. சர்ச்சை பேச்சு

yg-chinmayi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒய்.ஜி.மகேந்திரனை ட்விட்டரில் தெரிக்கவிட்ட சின்மயி.. குடியுரிமை சட்டம்.. சர்ச்சை பேச்சு

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் முக்கியமாக தமிழகம், கேரளா, கர்நாடகா , மேற்கு வங்கம், புது டில்லி மிகத் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில். திரைப்பட முன்னாள் நடிகரும், பாடகரான ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் மாணவிகளை சைட் அடிப்பதற்காக தான் இதுபோன்ற போராட்டத்திற்கு வருகிறார்கள் என்று சர்ச்சை கிளப்பியுள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன் பேசியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மட்டுமல்லாமல் மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாடகி சின்மயி அந்த மனுஷன் பேசுறத கேட்காதீங்க, அவர்களை மாற்றவே முடியாது,  நமது நேரம்தான் வீணாகும் என்று டுவிட்டரில் தைரியமாக பதிலளித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் சர்ச்சை பதிவிற்கு சின்மாயி சமூக வலைத்தளத்தில் பதிவினை பார்த்து ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு பெருகி வருகிறது. மாணவர்கள் போராடுவதை தடுப்பதற்காக இது போன்ற மன உளைச்சலை ஏற்படுத்தியது வாடிக்கைதான். ஆனால் நேர்மையாக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது தமிழகத்தில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top