Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் இருந்து மகேஷ் விலக இருப்பதாக தெரிகிறது.
டிஆர்பி யில் முதலிடத்தை தக்க வைத்திருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் தர்ஷக் கவுடா.
கிட்டத்தட்ட சீரியலின் ஆரம்ப புள்ளி இவர்தான். இவருடைய திருமணத்திற்காக பரிகாரம் செய்ய கிராமத்திற்கு போகும்போது தான் ஆனந்தியை சந்திப்பார்.
அது மூலம்தான் ஆனந்தி சென்னைக்கு வந்து வேலை செய்வது. ஆரம்பத்தில் மகேஷ் மற்றும் ஆனந்தி தான் சேருவார்கள் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் அன்பு கேரக்டர் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது. அழகன் என்னும் பெயரில் அன்பு ஆனந்தியை காதல் செய்தது எல்லோராலும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்டது.
சிங்கப்பெண்ணில் இருந்து விலகும் மகேஷ்?
இதனால் அன்பு மற்றும் ஆனந்தியின் காட்சிகள் அதிகம் இருக்கும் படி சீன்கள் வர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ஆனந்தி அன்புவை காதலிப்பாளா, அல்லது மகேஷை காதலிப்பாளா என்பதை தெரிந்து கொள்ளவே நிறைய பேர் சீரியலில் மூழ்கி போனார்கள்.
அன்புக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதே அளவுக்கு மகேஷுக்கும் இருக்கிறது.
இந்த நிலையில் அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு ஆனந்தி அன்பு வை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்து விட்டாள்.
அதன் பின்னர் மகேஷின் நடவடிக்கைகள் எல்லோராலும் வெறுக்கப்பட்டது. மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தியிடம் நெருக்கமாக பேசும் காட்சிகள் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்படவில்லை.
டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என ஆரம்பித்து இப்போது மகேஷ் சீரியலுக்கு வேண்டாத விருந்தாளி ஆகிவிட்டார்.
அதிலும் சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் ஓட்டில் ஃபேவரிட் ஹீரோ லிஸ்டின் நாமினேஷனில் கூட மகேஷ் வரவில்லை.
கதையின்படி டபுள் ஹீரோவாக இல்லாமல், வில்லனாக காட்டப்படுவதால் தர்ஷக் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் எந்த தகவலும் வெளியிடவில்லை.
சீரியலில் தனக்கு என்ன கேரக்டர், எந்த தருணத்தில் கேரக்டர் எப்படி மாறும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் தர்ஷக் சீரியலில் ஒப்பந்தமாக இருப்பார்.
ஒரு கட்டத்தில் வில்லனாக மாறி அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். அதனால் அவர் சீரியலை விட்டு வெளியே போக வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
எது எப்படியோ இரண்டு மூன்று நாட்களாக மகேஷ் எபிசோடில் இல்லாத காரணத்தால் கூட இப்படிப்பட்ட வதந்திகள் பரவி இருக்க வாய்ப்பு அதிகம்.