வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சிங்கப்பெண்ணே சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்.. ஆனந்தியை முந்திய அந்த நபர் யார் தெரியுமா?

Singapenne: சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றுதான் சிங்க பெண்ணே. டிஆர்பி லிஸ்டில் எப்போதுமே முதல் ஐந்து இடத்தில் ஏதாவது ஒன்றை இந்த சீரியல் தக்க வைத்து விடும்.

கிராமத்திலிருந்து குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற சென்னைக்கு வரும் ஆனந்தி. ஆனந்தியை உருகி உருகி காதலிக்கும் அன்பு.

ஆனந்தியை காதலிப்பதோடு அவளுடைய குடும்ப கஷ்டத்தையும் போக்கும் அளவுக்கு பொருளாதார வசதி கொண்ட மகேஷ்.

இந்த முக்கோண காதலுக்கு நடுவே மகேசை அடைய துடிக்கும் மித்ரா.

தன்னுடைய கணவரின் ஆசைப்படி நாத்தனார் பெண் துளசியை எப்படியாவது மகன் அனுபவிக்க திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் அம்மா.

இவர்களுக்கு நடுவே நடக்கும் போராட்டம் தான் தற்போது இந்த சீரியலின் திரைக்கதை.

இந்த சீரியலில் அன்பு கதாபாத்திரத்தில் அமலஜித், ஆனந்தி கதாபாத்திரத்தில் மனிஷா, மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷன் கவுடா, மித்ரா கதாபாத்திரத்தில் VJ பவித்ரா முக்கிய கேரக்டர்களாக நடித்து வருகிறார்கள்.

ஆனந்தியை முந்திய அந்த நபர் யார் தெரியுமா?

தற்போது இந்த சீரியல் ஆர்ட்டிஸ்ட்களின் ஒரு எபிசோடுக்கான சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கேரக்டரில் நடித்து வரும் மனிஷா 12,000 சம்பளமாக பெறுகிறார்.

ஜெயந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தாரணி 5000 சம்பளமாக பெறுகிறார். அன்புவின் தங்கை யாழினி கேரக்டரில் நடித்து வரும் திவ்யா விஜயகுமார் 5000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

மித்ராவாக நடித்து வரும் பவித்ரா 8000 சம்பளமாக பெறுகிறார். காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோக லட்சுமி எட்டாயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷன் 12 முதல் 15 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். கோகிலா கேரக்டரில் நடித்து வரும் நிவேதா 6000 ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அன்புவின் அம்மா கேரக்டரில் நடித்து வரும் அஞ்சு எட்டாயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.

ஹீரோ கேரக்டரில் நடித்து வரும் அமல்ஜீத் 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற அம்மன் சீரியலில் ஹீரோவாக நடித்தவர்.

Trending News