செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

வடிவேலு இல்லன்னா நீங்க இல்லை.. ஆதங்கத்துடன் சிங்கமுத்து கூறிய பதில்

கோலிவுட்டில் காமெடி கிங்காக வலம் வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் காமெடியை கண்டு சிரிக்காத ரசிக்காத ஆட்களே இல்லை. என்னதான் வடிவேலு சிறப்பாக காமெடி செய்தாலும் அவர் உடன் இருக்கும் காமெடி நடிகர்கள் தான் அவருக்கு பக்கபலமே.

அந்த வகையில் வடிவேலுவின் காமெடிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் தான் சிங்கமுத்து. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. வடிவேலு நடிக்கும் படங்களில் ஒரு சிறிய கேரக்டரிலாவது சிங்கமுத்து தலைகாட்டி விடுவார்.

அந்த அளவிற்கு இவர்களின் நட்பு சிறப்பாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒரு நிலத்தகராறில் இவர்களின் நட்புக்குள் விரிசல் ஏற்பட்டது. தற்போது வரை இவர்களை சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் சிங்கமுத்து இறங்கி வந்தபோதும் வடிவேலு அவருடன் மீண்டும் இணைய மறுத்து விட்டார்.

இந்நிலையில் வடிவேலு இல்லை என்றால் சிங்கமுத்து இல்லை என்பது போன்ற செய்திகள் சமீபத்தில் வெளியானது. இதற்கு பதிலளித்த சிங்கமுத்து, “எனக்கு அப்படி ஒரு நிலைமை ஒருபோதும் வராது. வடிவேலு இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தபோதும் நான் நடித்து கொண்டு தான் இருந்தேன். அவர் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் தொடர்ந்து நடித்து கொண்டுதான் இருக்கிறேன்.

தற்போது மாப்பிள்ளை விநாயகர், கூட்டாஞ்சோறு, இடியட் ஆகிய படங்களில் நான் நடித்து வருகிறேன். இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீர்கள்” என கூறியுள்ளார். இது வெறும் புரளி தான் அவர் இல்லாவிட்டாலும் என்னால் சாதிக்க முடியும் என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்துள்ளார் சிங்கமுத்து.

Advertisement Amazon Prime Banner

Trending News