fbpx
Connect with us

Cinemapettai

சந்தானத்தின் வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.. எங்கிட்ட இதை பண்ணச் சொன்னார் என அதிர்ச்சியை ஏற்படுத்திய சிங்கமுத்து

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்தின் வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.. எங்கிட்ட இதை பண்ணச் சொன்னார் என அதிர்ச்சியை ஏற்படுத்திய சிங்கமுத்து

தமிழ் சினிமாவின் நகைச்சுவை பகுதியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துச் சென்ற நடிகர் வடிவேலு. இன்று வடிவேலு இல்லாத மீம்ஸ் இல்லை என்பதுதான் நடைமுறை. அந்த அளவுக்கு தன்னுடைய நகைச்சுவையாலும் உடல் மொழியாலும் காமெடியை அள்ளி அள்ளி கொடுத்தவர் வடிவேலு.

அவருடன் மறக்க முடியாத கூட்டணியாக இருந்தவர் சிங்கமுத்து. இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த காமெடி காட்சிகள் அனைத்துமே செம ஹிட்.

வடிவேலு தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். ஆனால் சிங்கமுத்து தற்போது இருக்கும் இளம் நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

நடிகர் சிங்கமுத்து வடிவேலுவைப்பற்றி சொன்ன ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது, சந்தானத்துடன் சிங்கமுத்து சேர்ந்து நடித்தது வடிவேலுக்கு பிடிக்கவில்லை என்றும், நம்ம காமெடி ஐடியாவை அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சிங்கமுத்து கூறினார்.

இது வடிவேலு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கமுத்து ஏற்கனவே வடிவேலுவை பற்றி நிறைய புகார்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக வடிவேலுவும் சிங்கமுத்துவும் பிரச்சனை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top