fbpx
Connect with us

சிங்கம் 4 க்கு அட்வான்ஸ் குடுத்தாச்சி.! ஆனால் ஹீரோ விஜய்? சூர்யா?.. ஹரி குழப்பம்..

singam4-vijay-hari

News | செய்திகள்

சிங்கம் 4 க்கு அட்வான்ஸ் குடுத்தாச்சி.! ஆனால் ஹீரோ விஜய்? சூர்யா?.. ஹரி குழப்பம்..

வன்முறை, அந்த வன்முறைக்கேற்ற விறுவிறுப்பு என்று விளையாடுவதில் டைரக்டர் ஹரிக்கு இருக்கிற டெக்னிக் வேற யாருக்கும் இல்லை. சிங்கம் 1, 2, என்று வரிசையாக ஹிட் கொடுத்தவர், சிங்கம் 3 ஐ இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறார். அதற்குள் அவருக்கு சிங்கம் 4 பகுதிக்கான அட்வான்சை கொடுத்துவிட்டதாம் ஒரு பெரிய கம்பெனி. அதுவும் 2 கோடி!

ஹரியை வேறு கதையை யோசிக்க விட மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்த சிங்கம் 4 ல் நடிக்கப் போகும் ஹீரோ யார் என்பதில்தான் ஒரே குழப்பம். விஜய் ஹரி சந்திப்பு நடந்து, அதுவும் பாசிட்டிவ்வாக பதில் வந்து பல மாதங்கள் ஆச்சு. அப்படியிருந்தும் விஜய் ஹரி காம்பினேஷன் அறிவிப்பு என்ன காரணத்தினாலோ இழுபறியாகவே இருக்கிறது. நிஜத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், ஹரி ஒரு ரிங் மாஸ்டர் ஆகிவிடுவார். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு கூட என்னவாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதைதான் சாப்பிட வேண்டும் என்று மல்லுக்கட்டுவார். ஷுட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுவார்.

ஆனால் இதுக்கெல்லாம் ஓகே சொல்ற ஆள் விஜய் இல்லை. ஹரியும் தன் அதிகார போக்கை விஜய்யிடம் வைத்துக் கொள்ள மாட்டார். இருந்தாலும், இந்த பிராஜக்ட் அதனாலேயே தள்ளிப் போகிறதோ என்கிற யூகத்தை கிளப்பி வருகிறது.

ஹரிக்கு அட்வான்சை கொடுத்த அந்த தயாரிப்பாளர் , ‘விஜய்யா, சூர்யாவா? அது உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டதாம்!

விஜய்? சூர்யா? அந்த போலீஸ் யாருன்னு ரசிகர்கள் மற்றும் திரையுலகமே வைட்டிங் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top