சிங்கம் 3 படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கும் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான சண்டையும், சவாலும் நடந்தது.

ராக்கர்ஸ் குழு ஐந்து ரூபாய்க்கு சிடி கொடுப்பதாக மாணவர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் அறிவித்தது.

இதனால் பீதியடைந்த நடிகர் சூர்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்தது நீதி மன்றம்.

இதனால் சிங்கம் படக்குழுவினருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் கவலை அடைந்தனர்.

மாணவர்கள்,இளைஞர்கள் அனைவரும் வாட்ஸ் ஆப் குழுவில் கொண்டாடி தீர்த்தனர். ஒட்டு மொத்த மாணவர்களும் திரைபட துறைக்கு எதிராக திரும்பியதால் கடும் அதிர்ச்சி அடைந்தது சிங்கம் தரப்பு.

இன்றும் மாணவர்கள் வலைத்தளங்களில் வைரலாக ஒரு விஷயம் பரவியது. ராக்கர்ஸ் கையில் சிங்கம் சிக்கி விட்டதாகவும் அதை அவசரமாக பிரின்ட் போடும் பணி நடப்பதாகவும், நாளை இரவே வலைத்தளங்களில் சிங்கம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்து விட்டார்கள்.

அடப்பாவிகளா..சும்மா கிடந்த ராக்கர்ஸையும், மாணவர்களையும் இப்படி உசுப்பி விட்டுட்டுடீங்களே மக்களே..!