Tamil Cinema News | சினிமா செய்திகள்
துரைசிங்கம், ஆறுச்சாமி ஒரே படத்தில் இணைவார்களா – இயக்குனர் ஹரியின் பதில் இது தான்.

சாமி & சிங்கம்
இயக்குனர் ஹரி குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படங்களை தான் இதுவரை எடுத்து வந்துள்ளார். அவரின் போலீஸ் படங்களுக்கு ஸ்பெஷல் ரசிகர் கூட்டம் உள்ளது. அன்று விக்ரமின் சாமி ட்ரெண்ட் செட்டர் என்றால், இன்று சூர்யாவின் சிங்கம் தான் ட்ரேட் மார்க். துறை சிங்கத்துடன் மூன்று பாகம் முடித்த ஹரி, தற்பொழுது விக்ரமுடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியுள்ளார்.
பல நாட்களாகவே துறை சிங்கம் மற்றும் ஆறுச்சாமி இணைந்து படம் எடுப்பாரா ஹரி என்பது தான். முன்னணி நாளிதழ் ஒன்றில் இதே கேள்வி இயக்குனரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவரின் பதில் இது தான் ..
“சிங்கம் 3 படத்தில் ஒரு காட்சியில் துரைசிங்கம், ஆறுச்சாமி இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல கற்பனை செய்திருந்தேன். ஆனால் அது நிஜத்தில் நடப்பது சாத்தியமில்லை. இருவருமே மிகப்பெரிய ஸ்டார்கள். ஒரு சிறிய காட்சிக்கு அவர்களிடம் சென்று கேட்பது சரியாக இருக்காது.” என்று கூறியுள்ளார்.
